வயக்காடு தோட்டத்தில் கள் விற்பனை..!

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று முத்து கவுண்டன் புதூர், ராவுத்தூர் ரோட்டில் உள்ள வயக்காடு தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு (வயது 67) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 6 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.