தேனிமாவட்டம், ஊஞ்சம்பட்டி, ரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி பிரியா கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக ராமநாதபுரம், பரமக்குடி, தர்மராஜபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் அருளானந்து (வயது 48 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை வருகிறது..
ஸ்கூட்டர் மீது லாரி மோதி ஒருவர் பரிதாப பலி..








