இந்தச் சந்திப்பின் போது, அவர் செய்த ஒரு செயல் தற்போது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட போதே, அதனை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தார். டிரம்ப்பைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மரியா, “வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக டிரம்ப் காட்டிய தனித்துவமான அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாகவே இந்தப் பரிசை அவரிடம் ஒப்படைத்தேன்” என்று தெரிவித்தார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா ஒரு அற்புதமான பெண்மணி. அவர் தனது நோபல் பரிசை எனக்கு வழங்கியது ஒரு மிகப்பெரிய பரஸ்பர மரியாதையின் அடையாளம். அவருக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கப்பட்டாலும், நோபல் குழுவின் விதிகளின்படி இது செல்லுபடியாகாது எனக் கூறப்படுகிறது.
நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோபல் பரிசை ஒருவர் ரத்து செய்யவோ, மற்றவர்களுடன் பகிரவோ அல்லது வேறு ஒருவருக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால், அந்தப் பரிசு குறிப்பிட்ட நபருக்கே உரியது; அதுவே நிரந்தரமானது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.





