கோவை சிவானந்தா காலனி ,டாடாபாத் முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவ ஒரு மகன் லோகேஸ்வரன் (வயது 23 )இவர் ஆட்டோவில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார் . நேற்று இவர் அங்குள்ள ராஜு நாயுடு வீதியில் பனியன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் தனக்கு மாதம் மாதம் மாமுல் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் இங்கே தொழில் செய்ய முடியாது என்று கூறி மிரட்டினாராம். பணம் கொடுக்க மறுத்ததால் லோகேஸ்வரனை தாக்கி,கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது..இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி சுப்பாத்தாள் லேஅவுட்டை சேர்ந்த தென்னரசு மகன் லாரன்ஸ் (வயது 28 )என்பவரை நேற்று கைது செய்தார் இவரிடமிருந்து பணம் ரூ. 1000 , கத்தி, . ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது
மாமுல் கேட்டு மிரட்டல்..!








