கோவை தடாகம் பகுதியில் இருக்கும்
185 சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம்
கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2021ம் ஆண்டு மூடப்பட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கு இழப்பீடு விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் இழப்பீட்டை ஆய்வு செய்து, ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், டில்லியைச் சேர்ந்த தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (TERI) நிறுவனத்தை ஆய்வு மேற்கொள்ள உத்திரவிட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றுச்சூழலை மீட்டு எடுப்பதற்கான செலவுகளையும் TERI நிறுவனம் ஆய்வு செய்தது.ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் இழப்பீடாக 4.39 லட்சம் முதல் 12.28 கோடி வரை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு வழங்கியது .
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி TERI வரைவு அறிக்கையை 185 செங்கல் சூளைகளுக்கு , செங்கல் சூளை சங்கங்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.









