சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்.

ஒரு மாத காலம் கெடு சாலையை சீரமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம். கூட்டுக்குழு தலைவர் வால்பாறை அமீது அறிவிப்பு.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் வழியாக முடீஸ் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளதால்,  அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்  பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக  தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் ,சோலையார் பகுதியில் வாழை மரம் நட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வீ.அமீது பேசும் போது நீண்ட காலமாக இருந்து வரும் சாலை பிரச்சினைக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சீரமைத்து தர வேண்டும். தவறும் பட்சத்தில், ஆனைமலை பகுதியில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். இந்த சாலை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.