மகளிரணி மாநாட்டில் பங்கேற்க 29 ந்தேதி கோவை வருகை தரும் முதல்வருக்கு, கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது,மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 29 ந்தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள மகளிரணி மாநாட்டிற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள்,29 ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு கோவை விமானநிலையம் வருகை தர உள்ளார். முதல்வருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது என்றும், மகளிரணி மாநாட்டில் கோவையில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாணவரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் டாக்டர். மகேந்திரன், நெசவாளர் அணி சிந்து ரவிச்சந்திரன், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.







