நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் அதிக அளவில் செல்போன் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் செல்போன்களின் உதிரி பாகங்கள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நெல்லை அறிவுசார் சொத்துரிமை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் நெல்லை அறிவுசார் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் உள்ள 5 செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் யுஎஸ்பி கேபிள், சார்ஜிங் கேபிள், வயர்லெஸ் சார்ஜிங், பவர் அடாப்டர் உள்ளிட்ட 10 வகையான போலியான பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சோதனை செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ரூ.3.66 லட்சம் மதிப்பிலான போலியான பொருட்களை பறிமுதல் செய்து, 5 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.









