திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய கபாடி போட்டி.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு ,டிசம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை அகில இந்திய அளவிலான கபாடி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சடுகுடு 75 லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றனர்.

இதில் ஆண்களுக்கு 16 அணிகள் மற்றும் பெண்கள் 16 அணிகள் என சமமாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் முதல் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக 6 லட்ச ரூபாயும், இரண்டாவது வெற்றி பெறும் அணிக்கு பரிசாக 4 லட்ச ரூபாயும், மூன்றாவது வெற்றி பெறும் அணிக்கு பரிசாக 2 லட்ச ரூபாயும், நான்காவது வெற்றி பெறும் அணிக்கும் பரிசாக 2 லட்ச ரூபாயும் பரிசுகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போட்டி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியூ,ம் திருப்பத்தூர் நகரம் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் நுழைவு கட்டணம் ஆன்லைன் மூலம் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









