ஒன்றிய அரசு,தமிழகத்தின் மீது காட்டும் ஓர வஞ்சனை!

அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு,மிகப்பெரிய தொழில் வளங்களை கொண்டுள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை புறக்கணிப்பது, ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது காட்டும் ஓர வஞ்சனையாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையையும், மாநில அரசின் முயற்சியையும் மதித்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது என அவர் கூறினார்.மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு நான்கு தொழிலாளர் விரோதக் கறுப்புச் சட்டத் தொகுப்புகளை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தியிருப்பது, இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் எனவும், சீர்திருத்தம் என்ற போர்வையில் தொழிலாளர்களை நவீன அடிமைகளாக மாற்றி, உலக அளவில் தொழிலாளர்கள் மோராடி பெற்ற ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என இருப்பதை,ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலையாக சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர்களின் நலனை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைப்பதாக அவர் விமர்சித்தார்.