கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் தனியார் நட்சத்திர விடுதியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் “TN RISING” முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், முன்னிலையில், 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. tn raise மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,புதுமையும், புத்தொழிலும் நிறைந்து வாய்ப்புகளும் வளங்களும் கொண்ட தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை மண்ணில்,அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.நான் அடிக்கடி இந்த பகுதிக்கு வருவதால், திட்டங்கள் வந்து உள்ளதாக தெரிவித்தார்.முதல்வரான பின் 15 முறை கோவைக்கு வந்து உள்ளதாகவும்,அதிகமாக வருகை புரிந்த மாவட்டம் கோவை தான் என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் போல உங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.உங்களுக்காக நானும் திராவிட மாடல் அரசும் உழைக்கும் என்றார்.பல்வேறு முதலீடுகள் செய்பவர்களை வருக என வரவேற்கிறேன் என்றார்.புதுமையான முயற்சிக்கும் கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற கோவை மன்ணில், அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு துணையாக இருக்க கூடிய உங்களை சேர்த்து மாநாட்டை ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜா மற்றும் அத்துறை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
இதனால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை பெற்று உள்ளதாக கூறிய அவர்,இந்தியாவில் அதிகமாக 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சாத்தியபடுத்திய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளீர்கள் என்றார்.தமிழ்நாடு உலக நாடுகள் மத்தியில் சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையில் பணியாற்றுவதாக தெரிவித்தார்.1996 ல் சிட்கோ கொண்டு வந்ததால் தான் உலகமயமாகும் போது முதலீடுகளை மேற்கொள்ள முடிந்ததாகவும்,25 ஆண்டுகளுக்கு அட்வான்சாக சிந்தித்து திட்டங்கள் செயல்படுத்துகிறோம் என்றார்.வெளிநாடுகளுக்கு சென்று நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தது உள்ளதாக தெரிவித்தார்.









