ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த மாணவர்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான இடத்தில் உள்ள ஒரு பாறையில், காட்டு யானை ஒன்று கம்பீரமாக நின்றது.இதைப் பார்த்து அந்த பள்ளி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர்.








