நாட்டு மாடு மேய்ப்பதற்கு வனத்துறை அனுமதிக்காதது ஏன்?பிரேமலதா விஜயகாந்த்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் ஒரு மாறுபட்ட தேர்தலாக அமையும் என்றும் தாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சி தான் மலரும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

போடி நகருக்கு தானும் கேப்டனும் பலமுறை வந்துள்ளதாகவும், இதன் இயற்கையே ரசித்துள்ளதாகவும் கூறிய பிரேமலதா விஜயகாந்த், தற்போது மலை வளங்கள் உள்ள கனிம வளங்கள் முற்றிலும் சுரண்டப்படுவதாகவும், ஓடை மணல் திருட்டு நடைபெறுவதாகவும் கடுமையாக சாடினார்.

நாட்டு மாடு மேய்ப்பதற்கு வனத்துறை அனுமதிக்காதது குறித்தும், கனிம வள கொள்ளையர்கள் மற்றும் மணல் கொள்ளையர்களை மலைப்பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்கு அனுமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். நமது குடும்பத்தில் லட்சுமியாக கருதி போற்றப்படும் நாட்டு மாடுகளுக்கு உணவளிக்க மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர்,, விரைவில் கனிமவளே கொள்ளையை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களை பாதுகாத்து, நாட்டு மாடுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார். அவ்வாறு இல்லை என்றால், வருகின்ற 2026 தேர்தலுக்குப் பின்பு தாங்கள் அதை கையில் எடுத்து நடைமுறைப்படுத்துவோம் என்றும் கூறினார்.