நாட்டு வெடிகுண்டு கடித்து நாய் பலி – ஒருவர் கைது..!

கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 51 )இவர் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை தனது வீட்டின் அருகே உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று கடித்தது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து. இதனால் நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்..