ஆத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்..!

‌ திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் முதலீட்டு மானியத்தின் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ₹4.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்தைக்குளம் முதல் ராஜா புதுக்குளம் வரை உள்ள ஓடைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினையும், அதே ஊராட்சியில் நூலகம் சரியாக செயல்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தும், பஞ்சம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 34.23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியையும், வக்கம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 457 வீடுகளின் கட்டுமான பணியையும், வீரக்கல் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 99.50 இலட்சம் மதிப்பீட்டில் நாகப்பன்பட்டி முதல் கல் நாட்டான் பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையினையும், வீரக்கல் முதல் தெற்கு மேட்டுப்பட்டி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் ரூபாய் 250.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினையும், வீரக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 72.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4 கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியனையும் திறன்மிகு(smart class) வகுப்பறையில் மாணவ- மாணவியர்களின் கற்றல் திறனையும், மதிய உணவு தயாரிக்கும் கூடத்தினையும் ஆய்வு செய்து கலந்துரையாடினார். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எஸ். பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மல்லையாபுரம் முதல் எம்.ஜி தோட்டம் வரை உள்ள சாலை ஓரங்களில் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பீட்டில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணியையும், பழைய செம்பட்டியில் முதலீட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணியையும், சீவல் சரகு ஊராட்சிக்குட்பட்ட எஸ்.கோடாங்கி பட்டியில் முதலீட்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணியனையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உடன் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பத்மாவதி, உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..