பழனியில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி, தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை என அனைவரும் மலர் தூவி அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக முத்துராமலிங்கனரின் 118வது குருபூஜையை முன்னிட்டு கட்சி கொடிகளை ஏந்தியவாறு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தென்னிந்திய பார்முலா ஃபார்வேர்டு பிளாக் கட்சியினர் பலரும் பசும்பொன் நோக்கி புறப்பட்டனர்.