சரசரவென இறங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.1,800 குறைவு..!!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்தது..

சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 135 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.225 குறைந்து ரூ. 11,100க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..