கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர்ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் பாதுகாப்பில்
காவல்துறை பாதுகாப்புகளை மீறி 2 மர்ம நபர்கள்இருசக்கர வாகனத்தில்உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு கொடுக்க தவறிய காவல்துறையை கண்டித்தும், உள்ளே புகுந்த மர்ம நபர்களை வழக்கம் போல் பாதுகாக்க நினைக்காமல் சரியாக விசாரித்து உடனடியாக கைது செய்ய கோரியும் கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே இன்று மாலை 4 மணிக்கு கோவை பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில்அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் – பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்..!






