கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு அதிகம் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது இதை தடுக்க நடக்க எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் .கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டகாசத்தில் ஈடுபட்டு 3 பேரை தாக்கிக் கொன்ற ரோலக்ஸ் என்ற காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சியை அடுத்த டாப் சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கோவைஅருகே மருதமலை சுப்ரமணியசாமி கோவிலுக்கு செல்லும் மலைபாதைக்கு நேற்று அதிகாலை 3 குட்டிகளுடன் காட்டு யானைகள் வந்தன. அவைகள் மலைப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றன. அதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியில்கூச்சலிட்டனர் .இதற்கிடையே அந்த காட்டு யானைகள் வேகமாக சாலையை கடந்து வனப் பகுதிக்குள் சென்றன. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
குட்டிகளுடன் காட்டு யானைகள் மருதமலை ரோட்டில் உலா.!!






