திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்… குவியும் பக்தர்கள்… பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்..!

றுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழா, சூரசம்ஹார நிகழ்ச்சியுடன் உச்சத்தை எட்ட உள்ளது.

பக்தர் திரளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மருத்துவ அவசரநிலைகளை சமாளிக்க 20 டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 14 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் பக்தர்களின் சிரமத்தை ஊக்கிவிடாமல் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கோவில்வரை 45 இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடற்கரையில் பக்தர்கள் அதிகமாக திரள்வதை முன்னிட்டு 80 நீச்சல் வீரர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் நகரம் பண்டிகை சூழ்நிலையில் ஒளிர்கிறது. திரும்பும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக இருக்கிறது.