கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னர்காடு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணி உள்ளது .50 அடி உயரமுள்ள இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். தற்போது கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 36 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் கிடுகிடு என உயர்ந்து 38 அடிக்கு மேல் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 38.18 அடியை தொட்டது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு.!!





