தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.!!

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு 21-ந் தேதி (செவ்வாய்) அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது . அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..