காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்தார் .இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி சென்னையில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை காதலனிடமிருந்து பிரித்து வந்து வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் .அதில் விருப்பமில்லாத இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் காதலனுடன் சேர்ந்தார் .பின்னர் அவர்கள் கோவை இடையர்பாளையத்தில் வசித்து வந்தனர். அந்த காதல் ஜோடி நேற்று ஒண்டிப்புதூரில் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றனர். இதை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தியேட்டருக்கு சென்று காதலனின் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தித்தினர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.