கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி சந்தைக்குஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .இது குறித்து ஆட்டு வியாபாரிகள்கூறியதாவது:-பொள்ளாச்சி சந்தைக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்ட1000 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ரு 2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது. இதே போல் மாட்டு சந்தைக்கும் மாடுகள் வரத்து அதிகரித்தது . நாட்டு பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், காங்கேயம் காளை ரூ. 65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மாட்டு சந்தையில் ரூ. 3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
பொள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை..!

		
				        




