சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளியை முன்னிட்டு நாளை ( வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் ( சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 11-55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை போத்தனூர் சிறப்பு ரெயில் ( எண் 06049) மறுநாள் காலை 9:30 மணிக்கு போத்தனூர் வந்து அடையும். மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர் – சென்னை சிறப்பு ரெயில் (எண் 06050) அன்று இரவு 11 -10 மணிக்கு சென்னை ரெயில் நிலையத்தை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
தீபாவளியை முன்னிட்டு போத்தனூர் – சென்னை சிறப்பு ரயில் இயக்கம்..!
