கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. உள்ளே நுழைந்த ஆசாமி அங்கிருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடிக்க முயன்றார். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.. இதனால் அவர் கொண்டு வந்த கருவிகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதனால் ரு 5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது. இது குறித்து மறுநாள் தகவல் அறிந்த பெரிய கடை வீதி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் .இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் நம தாஸ் என்பவரை கைது செய்தனர். கைதான நபரிடம் இருந்து ஜன்னல் கம்பிகளை அறுக்க பயன்படுத்திய கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த சம்பவம் பெரியகடை வீதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நகை கடையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி – கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வடமாநில ஆசாமி.!!
