கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், டைட்டல் பார்க், விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 8-வது தடவையாக இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் இரு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்குபுகார் செய்யப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது. 2மணி நேரம் இந்த சோதனை நடந்தது .இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.வெறும் புரளி என்று தெரியவந்தது.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
8-வது தடவையாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
