வீட்டு மனை அங்கீகாரம் வழங்க ரூ.25 லஞ்சம் – ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பிரபாகரன் (வயது 45) இவருக்கு மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் ,மிருதுலா கார்டன் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தலா 3 சென்ட் வீதம் 5 வீட்டுமனைகளாக பிரித்து அதற்கு அங்கீகாரம் பெற ஊராட்சி செயலாளரான ரங்கசாமி என்பவரை அணுகினார். ஆனால் ஊராட்சி செயலாளர் ரங்கசாமி வீட்டு மனை அங்கீகாரம் வழங்க ராஜபிரபகானிடம் முதல்கட்ட மாக ரூ. 15, ஆயிரம் லஞ்சம் வாங்கினாராம். பின்னர் மீண்டும் நேற்று மதியம் ரூ 10 ஆயிரத்து 3 40 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ பிரபாகரன் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ. 10 ஆயிரத்து 340 – ஐஊராட்சி செயலாளர் ரங்கசாமியிடம் ராஜ பிரபாகரன் வழங்க சென்றார் .அவர் ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் பூபதி மூலமாக பணத்தை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக  பூபதி ரங்கசாமியை பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..