கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாதம் 14 – ந் தேதி 25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக ஆந்திராவை சேர்ந்த அப்பாராவ் மகன் கன்ட்ல ராம லட்சுமன்(20)மற்றும் ராஜு பாபு மகன் மண்டல வீரபாபு (21) ஆகியோரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கன்ட்ல ராம லட்சுமன், மண்டல வீரபாபு ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான கன்ட்ல ராம லட்சுமன், மற்றும் மண்டல வீரபாபு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
கஞ்சா கடத்தல் வழக்கு : கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!
