கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிசன் பகுதியில் அதிகாலையில் 2.30.மணியளவில் நுழைந்த கொம்பன் காட்டு யானை ஒன்று அங்கு வசிக்கும் மாரியப்பன் சுகன்யா என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைந்துள்ளது சத்தம் கேட்டு எழுந்த மாரியப்பனின் தாய் அஷரா வயது 56 என்பவர் தன்னுடன் தூங்கிக்கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு கதவை திறந்து வெளியே தப்பிக்க முயலும் போது காட்டுயானை அந்த குழந்தையை இழுத்து தாக்கியதோடு குழந்தையின் பாட்டி அஷராவையும் தாக்கியுள்ளது . இதில் குழந்தை சம்பவப் பகுதியிலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த பாட்டியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அக்ஷரா என்ற பாட்டியும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் அறிவித்ததை தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைத்னர். இந்நிலையில் இரு உயிர்களை பலி வாங்கிய காட்டு யானையை பிடிக்கவும் உரிய பாதுகாப்பு அளிக்கவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தால்தான் உடலை அடக்கம் செய்வதாக கூறி பொதுமக்கள் ஒன்று கூடி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து யானையை பிடிக்கவும் உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர் . இதனால் போக்குவரத்து சீரானது அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு தமிழக அரசு வனத்துறை சார்பாக வழங்கும் தலா பத்து லட்சம் இழப்பீட்டு தொகையில் ஏற்கனவே வழங்கிய ஒரு லட்ச ரூபாய் முன்பணம் இழப்பீட்டு தொகையோடு மீதமுள்ள 19 லட்சம் ரூபாயில் ரூ 9 லட்சத்தை வழங்கினார் . மேலும் மீதமுள்ள ரூ.10 லட்சம் ரூபாயை நாளை வழங்குவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முருகன், காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் மற்றும் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்..
கொம்பன் தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை பொள்ளாச்சி எம்.பி., அதிகாரிகளின் உத்திரவாதத்தை ஏற்று அடக்கம்.!!
