போட்டி போட்டு கொண்டு சரியும் வெங்காயம், தக்காளி விலை… அட!! ஒரு கிலோ இவ்வளவு தானா!!

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு கிலோ 60 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் தான் சமையலில் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் குவிந்து வருகிறது. அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவைகள் அதிகமாக இருப்பதால் லாரி லாரியாக வரத்து வருகிறது. இதன் காரணமாக விலையும் சற்று குறைந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உயர தொடங்கிய தக்காளி விலையானது மீண்டும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால் மூட்டை மூட்டையாக வெங்காயம் காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. இதன் காரணமாக வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கிறார்கள். அந்த வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயம் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,

கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,

பீட்ரூட் 1 கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது