கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10.01 கிலோ மீட்டர் தூரத்திற்குரூ 1,791 கோடி செலவில் பிரம்மாண்ட பாலம்கட்டப்பட்டுள்ளது. கடந்த 9 – ந் தேதி முதல்வர் .மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். வழக்கமாக உப்பிலிபாளையத்திலிருந்து கோல்டு வின்ஸ் வரை செல்ல 45 நிமிடம் வரை ஆனது. இந்த நிலையில் புதிய பாலம் திறக்கபட்ட பின்னர் 11 நிமிடங்களில் மேம்பாலத்தை கடக்க முடிகின்றது. காவல்துறை 35 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும் காரில் சிலர் அதிவேகமாக பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 2 – 30 மணிக்கு உப்பிலிபாளைய த்தில் இருந்து கோல்டுவின்ஸ் பகுதிக்கு ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் சென்ற லேன்சர்கார் பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் 100 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியது . இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது காரில் இருந்த பெண் உட்பட 3பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி செத்தனர். விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ஒண்டிப்புதூரை சேர்ந்த பஷீர் மகன் ஷேக்உசேன் ( வயது 20), உசேன் மகன் ஆரிப் ( வயது20 ), என்பதும், அவருடன் பயணம் செய்த இளம்பெண் செல்வபுரம், பிரகாஷ் மகள் சத்ய பிரியா (வயது 17 ) என்பதும் தெரிய வந்தது.இவர்கள் 3 பேரும் பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நள்ளிரவில் இவர்கள் காரில் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை. 3 பேரின் உடல்களையும் நீண்ட போராட்டத்திற்கு பின் போலீசார் மீட்டு சிங்காநல்லூர் இ. எஸ். ஐ .மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
நள்ளிரவில் கோவை அவிநாசி ரோடு ஜி.டி நாயுடு புதிய மேம்பாலம் அருகே விபத்து – பெண் உட்பட 3 பேர் சாவு..
