காட்டுயானை தாக்கி 2,1/2 வயது பெண் குழந்தை, அவரின் பாட்டி பரிதாப பலி..

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிசன் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் இரண்டரை மணியளவில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அங்கு வசிக்கும் மாரியப்பன் சுகன்யா என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் குழந்தையை இழுத்து தாக்கியுள்ளது . இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் பாட்டி அஷரா வயது 56 என்பவரை யானை தாக்கியுள்ளது . இதில் பலத்த கயமடைந்த நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு மற்றும் காயமடைந்த அஷராவையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..