கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில், மூன்று நாட்கள் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கைத்தறி ஆடைகள், பட்டு ஆடைகள், பட்டுப் புடவைகள், கைவினைப் பொருட்கள், உணவு அங்காடிகள் என பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்கால தொழில் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களும் அரங்கங்கள் அமைத்திருந்தனர். இதில் பெண்கள் அணியக்கூடிய ஆடை, ஆபரணங்கள், தோரணங்கள் இடம் பெற்றிருந்தன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுதேசி போற்றும் விதமாக பல்வேறு கைத்தறி கதர் ஆடைகள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன கதரைப் போற்றுவோம் ஆயிரக்கணக்கான கைவினை தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்ற அடிப்படையில் காதி நிறுவனமும் அரங்கங்கள் அமைத்திருந்தன. இந்த கண்காட்சியில், மாணவிகள் அமைத்திருந்த விரல் நகங்களை, நவீன முறையில் வண்ணம் தீட்டும் அரங்கம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாம் நினைக்கும் வடிவங்களையும், உருவங்களை, இந்த நெய்ல் பிரிண்டிங் மெஷின் மூலம், அவரவர் நகங்களில் வரைந்து கொள்ள முடியும். பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், கண்களை கவரும் விதமாக இந்த நெயில் பிரிண்டிங் இயந்திரம் நகங்களை ஜொலிக்க வைத்தது. திருமண நிகழ்வுகள் மற்றும் விழா காலங்களில், பெண்கள் ஆர்வமாக நகங்களை வண்ண மயமான பாலிஸ்களால் அழகு படுத்துவது வழக்கம். தற்போது பிரபலமடைந்து வரும் இந்த நெயில் பிரிண்டிங் மெஷின், மிக நுணுக்கமாகவும், கண்களை கவரும் விதமாக, நகங்களை அழகு படுத்துவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடடா! என்ன அழகு!! விரல் நகங்களை வண்ணமயமாக ஜொலிக்க வைக்கும் நெயில் பிரிண்டிங் மெஷின் பிரபலமாகி வருகிறது..!!
