கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது மனைவியுடன் புரூக் பாண்ட் ரோட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தார். காரை சசிகுமார் ஓட்டினார். அவர்கள் அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் வந்தபோது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதையடுத்து சசிகுமார் உடனே காரை நிறுத்தினார். பின்னர் 2 பேரும் காரை விட்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென்று காரில் தீப்பிடித்து எரிந்தது .இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர் . இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது .தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது..
ஓடும் காரில் திடீரென பற்றிய தீ – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி..!
