தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பித்த தவெக..!!

ரூர் துயர சம்பவத்திலிருந்து வெளியே வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் பல மாவட்டங்களுக்கும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அவ்வாறாக கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளதால் கட்சியின் தேர்தல் பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய் வரும் வாரத்தில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்த பிரச்சினைகளில் இருந்து மெல்ல எழுந்து வரும் தவெக அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் சின்னம் பெறுவது குறித்து தவெக விரைவில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க உள்ளது.

முதலில் தவெகவின் தேர்வு ஆட்டோ சின்னமாக இருந்த நிலையில அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தவெக தற்போது விசில், மைக், உலக உருண்டை இதில் ஒன்றை தங்கள் சின்னமாக கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.