கோவை புலியகுளம் அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37) தச்சு தொழிலாளி.இவருக்கும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த புலியகுளம் ஏரி மேட்டைச் சேர்ந்த காஞ்சனா தேவி ( வயது 27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது .இவர்கள் சவுரிபாளையத்தில் 2019 ஆம் ஆண்டு வாடகை வீட்டில் வந்தனர். அப்போது அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அவர்கள் சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி தெருவில் ஒரு வீடு பார்த்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் மேரி ஏஞ்சலியின் ( வயது 48) மாத வாடகை ரூ.8 ஆயிரம் அட்வான்ஸ் ரூ 50 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் ஒப்புக்கொண்டனர். அப்போது மேரி எஞ்சலின் நிறைய தங்க நகைகளை அணிந்திருந்தார். அதை கொள்ளையடிக்க அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 18-3- 2019 அன்று இரவு காஞ்சனா தேவி அன்னை வேளாங்கண்ணி தெருவுக்கு சென்று வீட்டு உரிமையாளர் மேரி ஏஞ்சலினிடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க பெயிண்டர் வந்துள்ளார் .எனவே வீட்டை திறந்து காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் . இதை நம்பிய மேரி ஏஞ்சலின் வீட்டை திறந்து காட்ட சாவியுடன் சென்றார். ஆனால் கள்ளக்காதலன் ரமேஷ் அங்கு காத்திருந்தார். வீட்டுக்குள் மேரி ஏஞ்சலின் வந்ததும் ரமேஷ் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனால் பயந்து போன ரமேஷ் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரி எஞ்சலினை குத்தி கொலை செய்தார். பின்னர் அவரது கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு 2 பேரும் தப்பிச் சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், காஞ்சனா தேவி ஆகியோரை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது .நேற்று நடந்த இறுதி விசாரணையில் குற்றம் சாட்டபட்ட கள்ளக்காதல் ஜோடியான ரமேஷ், காஞ்சனா தேவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபுலால் தீர்ப்பு வழங்கினார்..
பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கு – கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை.!!









