கோவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வந்தபோது தங்க நகை பட்டறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார் .அப்போது தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம் கோவை பொற்கொல்லர் சங்கம், கோவை மாவட்ட தங்க நகை கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தங்க நகை பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை அருகே உள்ள குறிச்சி தொழில் பேட்டையில் ரூ 126 கோடியில் தங்கநகை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் குறிச்சி தொழில் பேட்டையில் முதல் கட்டமாக ரூ 81 கோடியே 40 லட்சம் செலவில் 5 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று மதியம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தங்க நகை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்.. இந்த பூங்காவில் 100 முதல் 300 சதுர அடி பரப்பளவு கொண்ட பட்டறைகள், தங்க நகைஉற்பத்தி சார்ந்த நவீன எந்திரங்கள் ,தங்க பாதுகாப்பு பெட்டகம், .ஹால்மார்க் தர பரிசோதனை கூடம், நகை கண்காட்சி கூடம், கூட்ட அரங்கம் 3 டி. பிரிண்டிங் லேசர், கட்டிங் மற்றும் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்குபொற்கொல்லர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். விழாவில் அமைச்சர்கள், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திக் கோவை கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து விஸ்வகர்ம சமுதாய சங்கங்களின் தலைவர் ரகுநாதன் சுப்பையா ,செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருண்குமார், துணைத் தலைவர்கள் புஷ்பராஜ் ,கணேஷ் சுப்பையா, துணை செயலாளர்கள் குமார், பிரகாஷ், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
தங்க நகை பூங்கா – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.!!
