கோவை:சரக்கு வாகனம் இயக்கும் ஓட்டுனர் சுடலைமுத்து நேற்று சிங்காநல்லூர் வசந்தா மில் அருகில் U Turn செய்ய ஆட்டோவை திருப்பும் போது பின்னால் காரில் வந்த இளைஞர்களுடன் வாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியது.இதனை தொடர்ந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுக்க முயன்றனர். அதை தடுக்க முயன்று சுடலைமுத்துவை காரில் இழுத்து சென்ற நிலையில் சிறிது தூரம் தொங்கிய நிலையில் சுடலைமுத்து காரில் இருந்து விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுடலைமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு காரில் வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
U Turn எடுப்பதில் தகராறு… ஆட்டோ ஓட்டுனரை காரில் இழுத்து சென்ற இளைஞர்கள்..!!
