பணம் வைத்து சீட்டாட்டம் – நால்வர் கைது..!

கோவை கரும்புக்கடை சாரமேடு ,சலாமத் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக போத்தனூர் கருப்பராயன் கோவில்,வசந்தம் நகரை சேர்ந்த சுகில் ரசித் (வயது 28) சாரமேடு, இலாகி நகர் ஜூலிபர் அலி (வயது 38 )ஆத்துப்பாலம் ஜாகிர் உசேன் (வயது 39)கோட்டைமேடு வின்சென்ட் ரோடு ஹிதயாத்துல்லா (வயது 46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணம் ரூ 1,500மற்றும் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.