சுதர்சன சக்கர திட்டம்… ஏகே-630 வான் பாது​காப்பு துப்பாக்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்..!

சுதர்சன சக்கர திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசின் ‘அட்​வான்​ஸ்டு வெப்​பன் அண்ட் எகியூப்​மென்ட் இண்​டி​யா’ (ஏட​யுள்​யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாது​காப்பு துப்​பாக்கி அமைப்​பு​களை இந்​திய ராணுவம் கொள்​முதல் செய்ய உள்​ளது.

இதற்​கான டெண்​டரை ராணுவம் நேற்று வெளி​யிட்​டது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: டிரோன்​கள், ராக்​கெட், பீரங்கி குண்​டு​கள் ஆகிய​வற்​றின் அச்​சுறுத்​தலை எதிர்​கொள்ள இந்த ஆயுதம் பயன்​படுத்​தப்​படும். பாகிஸ்​தானுட​னான சர்​வ​தேச எல்லை மற்​றும் எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்​டுக்கு அரு​கில் அதிக மக்​கள் வசிக்​கும் பகு​தி​கள் மற்றும் வழி​பாட்​டுத் தலங்​களின் பாது​காப்​புக்கு இவை பயன்​படுத்​தப்​படும்.

இந்த வான் பாது​காப்பு துப்​பாக்கி அமைப்​பானது ஒரு டிரெய்​லரில் பொருத்​தப்​பட்​டு, கனரக வாக​னத்​தால் இழுத்​துச் செல்​லப்​படும். இதன் மூலம் 4 கி.மீ. தொலைவு வரை​யிலும் நிமிடத்​திற்கு 3,000 சுற்​றுகள் வரை​யிலும் தாக்​குதல் நடத்த முடி​யும். அனைத்து காலநிலை​யிலும் இதனை பயன்​படுத்த முடி​யும். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.