கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்ட அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் 9-ம் தேதி திறப்பு.!!

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 – 1கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ரூ 1 7 9 1 கோடி செலவில் இது கட்டுப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட மேம்பாலம் இதுதான்.17.25 மீட்டர் அகலத்துடன் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்து வைத்து காரில் சென்று பார்வையிடுகிறார் .அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் மேம்பால பணிகள் குறித்து பொறியாளர் சமுத்திரக்கனி கூறியதாவது:- மேம்பாலத்துக்காக ஏறுதளம், இறங்குதளம் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெசிடென்சி ஒட்டல் அருகில் மட்டும் வழக்கின் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மேம்பாலம் திறக்கப்படுகிறது. அண்ணா சிலை, நவ- இந்தியா, பீளமேடு மற்றும் விமான நிலையம் போன்ற முக்கிய சந்திப்புகளில் ஏறுதழும் இறங்குதளம் பகுதிகளில் பணிகள் முடிவடைந்து தரம் பரிசோதிக்கப்பட்டு அனைத்தும் சரியாக உள்ளது ஏறு தளம் இறங்கு தளம் பகுதிகளில் வாகனங்களில் செல்லும்போது தடுப்புச் சுவரில் மோதி விடாமல் தடுக்க 36 மீட்டர் நீளத்துக்கு 7 இடங்களில் ரோலர் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் மோதினால் வாகனங்களை தடுப்புச் சுவரில் மோதாமல் தடுத்து நிறுத்தும். மேம்பாலத் தூண்களுக்கு இடையே பசுமையை பேணுவதற்கு அழகு செடிகள் நடவு செய்து, பசுஞ்சோலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மழைநீர் சேகரிப்பு, சொட்டு நீர் பாசன அமைப்பு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேம்பாலம் தொடங்கும் உட்பிலிப்பாளையம் சந்திப்பில் ரவுண்டான அமைக்கப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. உப்பிலிபாளையம் சந்திப்பிலிருந்து கோல்டு வின்ஸ்க்கு 10 நிமிடங்களில் சென்றடையலாம். உப்பிபாளையத்திலிருந்து விமான நிலையத்துக்கு 9 நிமிடங்களில் செல்லலாம். இதற்கு முன்பு அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 40 நிமிடங்களுக்கு மேலானது தற்போது அவினாசி ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் விரைவாக செல்லும் நிலை உருவாகிஉள்ளது. அவிநாசி ரோட்டில் பள்ளி -கல்லூரிகள் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன இதனால் காலை மாலை நேரங்களில்போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மேம்பாலம் திறக்கப்படுவதை ஒட்டி வானங்கள் பெரும்பாலும் மேம்பாலத்தின் வழியாக செல்லும் போது அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.