கோவை அக்டோபர் 6 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டும் உள்ளன. இதனால் கோவையில் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி,ராஜவீதி,காந்திபுரம்,கிராஸ் கட் ரோடுபகுதிகளில்மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கோவைக்கு பொருட்கள் வாங்க மக்கள்வருகை தருகிறார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு,வழிப்பறி சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அது போன்று திருட்டுசம்பவங்கள் வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..திருட்டு மற்றும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து பிடிப்பதற்காக போலீசார் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் மேலும் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இது தவிர ராஜவீதி,,பெரிய கடை வீதி, காந்திபுரம் பஸ் நிலையம்உட்பட 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது அதிலிருந்த படியே போலீசார் தொலைநோக்கி ( பைனாக்குலர்) மூலம் மக்கள் கூட்டத்திற்குள் யாராவது சந்தேகத்திற்கிடமானவர்கள் சுற்றித் திரிகிறார்களா? என்று கண்காணிக்கிறார்கள் .அதோடு பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறார்கள்.தீபாவளி நேரத்தில் கடைவீதிகளுக்கு கார்கள் ‘மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் மக்கள் வருவார்கள் .அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான “பார்க்கிங் “வசதி செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது
கோவையில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்..!
