பெண் தீக்குளித்து தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45 )கருத்து வேறுபாடு காரணமாக கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் இந்த நிலையில் மகேஸ்வரி மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். .இது குறித்து அவரது அக்கா லதா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.