இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டார் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலளார் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன், மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களின் மதியழகன், பவுன்ராஜ் கைதாகி உள்ள நிலையில், ஆனந்த், நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றம் மனு தாக்கல் செய்தனர். அதனை சென்னை உயர்நீதின்றம் தள்ளுபடி செய்தது. இதனால், இரண்டு பேரும் விரையில் கைது செய்யப்பட உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி சென்னை மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், தவெக தலைவர் விஜயின் பரப்புரை தடை கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், விஜயை கடுமையாக சாடினார். விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என தெரிவித்த நீதிமன்றம், தவெக என்ன மாதிரியான கட்சி. தொண்டர்கள், மக்கள் என அனைவரையும் தவிக்கவிட்டு வெளியேறிவிட்டார் என கூறினார். அதோடு, சர்ச்சை பதிவை போட்ட ஆதவ் அர்ஜுனா சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?
என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. எனவே, இன்றுக்குள் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படலா என தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றனர். இப்படியான சூழலில், டேராடூனில் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி நடைபெறும் நிலையில், அதில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொள்கிறார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு குறித்து அவரிடன் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த, நீதிக்காக உழைத்து வருகிறோம் என்று உண்மை வெளியே வரும் என்றும் அவர் கூறியுள்ளார்..