கோவை ராஜவீதியில் அருள்மிகு. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிறைவு நாளில் பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடந்தது .பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி பக்தர்களின்ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானபெரியவர்கள் இளைஞர்கள்,தங்கள் கைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீளமான கத்தியால் கீரி ரத்தத்தை வரவழைத்து ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அவர்கள் “வேஷ்க்கோ” “தீஷ்க்கோ”,போட்டுக்கோ, ,வாங்கிக்கோ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பியவாறு சென்றனர். இந்த நேர்த்திக்கடன் செயல் செய்வதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம் .பக்தர்கள் உடலில் ஏற்பட்ட வெட்டு காயங்களின் மீது திருமஞ்சள் பொடியை வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டே சென்றனர்.இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்கள் நெஞ்சை நெகிழ செய்தது..இந்த மஞ்சள் பொடி வைத்தால் 3 நாட்களில் வெட்டுக்காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இந்தகத்தி போடும் நிகழ்ச்சியில் கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டை அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவனும் கலந்து கொண்டுகத்தியால் உடலைக் கீறிக் கொண்டார்.
நவராத்திரி விழா… உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி – ரத்தம் சொட்ட, சொட்ட பக்தர்கள் ஊர்வலம்..!
