பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்து போராட்டங்களைத் தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
போராட்டக்காரர்கள் ராணுவத்தை கேலி செய்யும் வகையில், சாலையோர வேலிகளில் பாகிஸ்தான் ராணுவ சீருடைகள், தலைக்கவசங்கள் மற்றும் கேடயங்களை தொங்கவிட்டு, அவற்றை ஒவ்வொன்றும் ரூ.10க்கு விற்பனை செய்வதாக வீடியோவில் தெரிவிக்கின்றனர். பின்னணியில் மக்கள், ராணுவத்தை கேலி பேசும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தலைமையிலான படைகள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், மக்கள் போராட்டத்தை நிறுத்த மறுப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெரிய கூச்சலுக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை கேலி செய்வதிலிருந்து பின்வாங்கவில்லை.