இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் வரும் அக்டோபர் 26ம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது விமான சேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அப்போது நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.