கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து சென்னை சென்றுவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் வழக்கு காரணமாக வழக்கமான இந்த ஏற்பாடு வேலைகளை செய்யும் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில், விஜய்யின் கரூர் பயண ஏற்பாடுகளை செய்ய 20 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மட்டும் பேசி, எந்த வித கூட்டமும் கூடாமல் விஜய் வந்து அவர்களை சந்தித்து செல்ல ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கரூர் சம்பவம் குறித்து பதிவிட்ட தவெகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களுக்கு உதவ சட்ட உதவி குழுவையும் அமைக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.