ஜெயலலிதா இருந்திருந்தால் விஜய் எப்போதோ கைது செய்யப்பட்டுருப்பார் – நக்கீரன் கோபால்..!

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் அன்றிரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..

ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி ” சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தானர்..

எனினும் கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக செய்த சதியே காரணம் என்று சமூக வலைதளங்களில் தவெகவினர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.. குறிப்பாக விஜய் பேசிய போது செருப்பு வீசப்பட்டது என்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனவும் சம்பவம் நடந்த உடனே எப்படி செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்றார் என்றும் பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்..

இதனிடையே கரூர் தவெக பரப்புரையில் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய வீடியோ வெளியானது.. அதன்படி விஜய் பேசத் தொடங்கிய போதே அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.. அப்போதே பலர் மயங்கி விழுந்ததும், அந்த மோசமான சூழல் குறித்து விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது.. செருப்பு மட்டுமின்றி கட்சிக் கொடி, தண்ணீர் பாட்டீல் என கையில் கிடைக்கும் பொருட்களை அங்கிருந்தவர்கள் தூக்கி எறிவதையும் பார்க்க முடிகிறது.. தங்களை நோக்கி பார்க்கும் படி பலர் சைகை செய்வதையும் அதில் காணலாம்..

எனினும் இந்த விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? அவரை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இந்த நிலையில் நக்கீரன் கோபால் இன்று பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ” 41 பேர் நம்மால் தான் இறந்தனர் என்பதை விஜய் உணரவில்லை. பழியை முதல்வர் மீது போடுகிறார்.. வீடியோவில் கூட சி.எம். சார், பழிவாங்கணும்னா என்னை எது வேண்டுமானலும் செய்யுங்க என்று விஜய் பேசியுள்ளார்.. நான் வீட்டில் இருப்பேன் இல்லை அலுவலகத்தில் தான் இருப்பேன் என்று கூறுகிறார்.. அவன் தான் சொல்லிட்டான்ல கைது செய்ய வேண்டியது தானே.. 41 கொலைகளை பற்றி உனக்கு கவலை இல்லை.. ஆனா உன் ஆட்கள் மீது கை வைத்த உடன் என்னை எது வேணும்னாலும் செய்யுங்க என்று கூறுகிறார்..

ஜெயலலிதா இருந்த போது, மருத்துவர் ஐயா ஒருமுறை ‘முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.. என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று சொன்னார்..’ உடனே அவரை கைது செய்து ஜெயிலில் போட்டார்.. இதுபற்றி சட்டமன்றத்தில் பேசும் போது அவர் தான் என்னை கைது செய்ய சொன்னார் என்று ஜெயலலிதார் கூறினார்.. ஜெயலலிதா இருந்திருந்தால் விஜய் எப்போதோ கைது செய்யப்பட்டிருப்பார்.. அந்த மாதிரி முதல்வர் ஸ்டாலின் மிகவும் மென்மையான போக்கை கையாள்கிறார்.. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் குணம் நல்ல குணம் என்று சொல்லவில்லை.. ஆனால் இந்த குணத்தை கொஞ்சம் முதல்வர் எடுத்துக் கொள்ள வேண்டும்.. விஜய்யை கைது செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.